கரையும் இடைவெளி

கனவு. மூன்றெழுத்து.ஆழமோ, வேறொரு உலகம் அறியும்.   காதல். மூன்றெழுத்து. ஆழமோ, அவள் கண்ணிமைகளில் நீ கட்ட நினைக்கும் முத்தக்கோட்டை அறியும். கனவும் நிறைவேறி , அது காதலியாய் மாறி அவ்வப்பொழுது நினைவூட்டும் அழகிய நினைவுகளில் ஒன்று . அன்று திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தோம். ரயிலில் இருக்கும்  இரண்டாவது அடுக்கில் தூங்கிக்கொண்டிருந்தேன் நான். ஆறடிக்கு தென்னைமரம் போல் வளர்ந்துவிட்டமையால் ரயில் பயணத்தில் வசதிக்கெல்லாம் இடம் இல்லை. திடீரென்று முழிப்பு வர, கண்ணை கசக்கிக்கொண்டே எழுந்தேன். "என்னடா? தூங்கு" என்றாள் …

Continue reading கரையும் இடைவெளி

Advertisements

என் காதலி

"என் கதைய சொல்லிட்டேன்.  உங்களோட காதல் கதைய சொல்லுங்க. இருக்கும்னு நெனைக்கிறேன்." "ஓ, இருக்கே. சொல்றேன். என் காதலி. சின்ன வயசுல இருந்தே என் கூட தான் இருக்கா. அப்போலாம் ரொம்ப நெருங்கின நண்பர்கள்" "சின்ன வயசு தோழியா?!! அற்புதம்" "ஆமா. அப்போலாம் அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும். எப்பயுமே என் கூட தான் இருப்பா. ஆனா எனக்கு அவ்ளோவா பிடிக்கல. பள்ளி பருவம் முடிஞ்சி, கல்லூரி காலம். அப்போ என்ன விட்டு தூரமா பொய்டா. அதுக்கு …

Continue reading என் காதலி

மொழி- உரையாடல்

"மொழியால எதுவேனாலும் செய்யவும், சொல்லவும் முடியுமா?" "முடியும்" " எனக்கு அப்படி தோணல. சில விஷயங்கள மொழியால சொல்ல முடியாது நினைக்கிறேன்" " அது நீங்க எத மொழினு சொல்றீங்கனு பொறுத்து" " காதல சொல்ல முடியுமா?" "Again, காதலே ஒரு மொழி தான். நீங்க எத மொழினு சொல்றீங்க?" " பேசுற பாஷய சொல்றேன். இப்போ தமிழ் மொழியோ, ஆங்கிலமோ இல்ல வேற ஏதோ மொழியோ இருக்கட்டும். காதல உணர்த்திக் காட்ட முடியுமா? முடியாதுல?" " …

Continue reading மொழி- உரையாடல்

​MONA LISA SMILE (2003) & DEAD POET’S SOCIETY (1989)

  MONA LISA SMILE (2003) & DEAD POET'S SOCIETY (1989)   People who have watched these 2 wonderful movies will agree to me if i say that both these movies, stories of which is set up at reputed schools, are like 2 beautiful stones with similar appearances, yet with different characteristics. When i watched Mona …

Continue reading ​MONA LISA SMILE (2003) & DEAD POET’S SOCIETY (1989)

என் வீட்டில் அவள்

​அன்று காலை மணி 7 இருக்கும். எழுந்ததும் அம்மாவின் கட்டளைக்கேற்ப, வாசலைப் பெருக்கி, பாலை அடுப்பில் வைத்து, சிறிது ரஹ்மான் இசையில் மிதப்போம் என தொலைக்காட்சியை வைத்து நல்ல பாடல் ஒலிக்கும் channelஐ தேடினேன்.          " ஹோசன்னா, வாழ்வுக்கும் பக்கம் வந்தேன், ஹோசன்னா சாவுக்கும் பக்கம் நின்றேன்" என கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததைப் போல், ரஹ்மான் பாடிக்கொண்டிருக்க, இசையின் மாயாஜாலம் துவங்கியது. என் காதலியை நினைத்து என்னை அறியாமல் …

Continue reading என் வீட்டில் அவள்

நான் கவிஞன்…

காலங்கள் மாறினாலும் , என்றும் நினைவில் இருக்கும் ஒரு நாள் அது.அந்த நாள்.... காலை சுமார் 4 மணி இருக்கும். துள்ளி குதித்து எழுந்தேன். மனதில் உற்சாகம் பொங்க அன்று இரவு என் கனவில் வந்த ஒரு சிந்தனையை வைத்து என் கவிதையின் அடுத்தடுத்த இருவரிகளை எழுதினேன். ஆனால் அந்தக் கவிதையின் இறுதி வரிகளை என்னால் எழுத முடியவில்லை. ஏதோ ஒரு வார்த்தையை தேடிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து, என் கடிகாரம் ஒலிக்க, அதை அணைத்து, முடியாத …

Continue reading நான் கவிஞன்…

அவளும் நானும்

​மாலை 4.30 மணி. மொட்டை மாடியில் அவளும் நானும். ஓடிக்கொண்டே இருக்கும் சென்னை மாநகரின் நடுவே நொடிகளை ரசித்துக்கொண்டு நானும் அவளும். ஊதாப்பூ தாவணி தென்றலுக்கு நடனம் ஆட, கவர்ந்தன கண்மணியின் கண்கள்.  பேசிக்கொண்டே இருந்தும் பேசாமல் இருப்பதைபோன்ற உணர்வு. உலகில் முதல் முதலில் இசை தோன்றிய தருணம் தானோ, அவள் அவ்வப்போது இசைக்கும் அமைதி.  அவள் பேச்சில் நான் மயங்க, சில நொடிகளில் அவள் மடியில்.  அழகு எது என்று மனதில் யுத்தம் வர, கடவுள் …

Continue reading அவளும் நானும்